POCO F5 5ஜி ஸ்மார்ட் போன் பிளிப்கார்ட்டில் ரூ.29,999-க்கு விற்பனை ஆகிறது. போனின் விலையில் ரூ.5,000 தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி வாயிலாக மொபைலுக்கு ரூ.3000 தள்ளுபடியானது வழங்கப்படுகிறது. இப்போனை மலிவு EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளிலும் வாங்கிக்கொள்ளலாம். அதே சமயத்தில் Poco F5-ல் Snapdragon 7+ Gen 2 சிப்செட், 64MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

Redmi Note 12 Pro+5ஜி ரெட்மியின் பிரீமியம் ஸ்மார்ட்போன் ஆகும். இதன் 256gp சேமிப்பு மாடலை ரூ.29,999-க்கு வாங்கலாம். HDFC மற்றும் ICICI வங்கியின் கிரெடிட், டெபிட் கார்டுகளை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியானது வழங்கப்படுகிறது. மேலும் ரூபாய்.28,800 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படும். Note 12 Pro Plus 6.67 இன்ச் திரை, 200MP கேமரா, 4980mAh பேட்டரி மற்றும் Mediatek Dimensity 1080 சிப்செட் போன்றவற்றை கொண்டுள்ளது.

Vivo V27 Pro 5ஜி போன்12gp+256gp சேமிப்பு மாறுபாடு பிளிப்கார்ட்டில் ரூ.42,999-க்கு கிடைக்கும். HDFC மற்றும் ICICI வங்கியின் கிரெடிட் கார்டுகளில் பணம் செலுத்தினால் ரூபாய்.3000 தள்ளுபடியும், EMI விருப்பத்தை தேர்வு செய்தால் ரூ.4000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது தவிர்த்து போனில் ரூபாய்.30,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. சாதனம் 3D வளைந்த திரையிலிருந்து 4600 mAh பேட்டரியை கொண்டு உள்ளது.

OPPO Reno 8T 5ஜி ஸ்மார்ட் போன் பிளிப்கார்ட்டின் விற்பனையில் ரூ.29,999 விலையில் கிடைக்கும். இதற்கு ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது 6.43 இன்ச் டிஸ்ப்ளே, 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50mp டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. Mediatek Dimensity 1300 செயலியானது இதில் இருக்கிறது.

Redmi Note 12 Pro 5ஜி மொபைலின் ஆரம்ப விலையானது ரூ.24,999 ஆகும். இப்போனை பிளிப்கார்ட்டிலிருந்து ரூ.3000 தள்ளுபடியிலும், மலிவு EMI மற்றும் ரூ.24,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையிலும் வாங்கலாம். மேலும் ​​நோட் 12 ப்ரோ முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 50mp டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் மீடியாடெக் டைமென்சிட்டி 1080 சிப்செட் போன்றவற்றை கொண்டு உள்ளது. அதோடு போனில் 5000mAh பேட்டரி இருக்கிறது.