அமெரிக்காவில் உள்ள ஓஹியோமாகாணத்தில் ஐந்து வயது சிறுவன் அவனது பெற்றோர் வீட்டிற்கு கொண்டு வந்த 40 சர்க்கரை இல்லாத சூயிங்கம் சாப்பிட்டுள்ளான். சமீபத்தில் சிறுவனின் உடல்நிலை சரியில்லாமல் போனதும் அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டியாக பொருள் இருப்பதை கண்டறிந்து அது ஆபத்தானது என்று கூறி உடனடியாக உணவு குழாயில் சிக்கி இருந்த சுயிங்கத்தை முழுவதுமாக குழாய் மூலம் அகற்றினர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தற்போது சிறுவன் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் சிறுவனின் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது