புனே நகரின் பரபரப்பான ஒரு சாலையில், மனிதாபிமானத்தைப் பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்தச் சூழலில், அங்கிருந்த மக்கள் ஒதுங்கிச் செல்லாமல் உடனடியாக அவருக்கு உதவ முன்வந்தனர்.

அங்கிருந்த பெண்கள் தங்கள் துப்பட்டாக்களைக் கொண்டு அந்தப் பெண்ணைச் சுற்றி ஒரு தற்காலிகத் திரையை உருவாக்கி அவருக்குத் தனிமை பாதுகாப்பை வழங்கினர். அதே நேரத்தில் அங்கிருந்தவர்கள் மருத்துவ உதவிக்கு அழைப்பு விடுத்தனர்.

அதிர்ஷ்டவசமாக அந்த இடத்திற்கு வந்த ஒரு பெண் மருத்துவர், எவ்வித மருத்துவ வசதிகளும் இல்லாத நிலையிலும் துணிச்சலாகப் பிரசவத்தைச் செய்ய முன்வந்தார். மக்களின் ஒருங்கிணைந்த உதவியுடனும், மருத்துவரின் துல்லியமான வழிகாட்டுதலுடனும் அந்தப் பெண்ணிற்குச் சாலையிலேயே பாதுகாப்பாகப் பிரசவம் நடந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Culture ™ (@mumbaiculture.in)

“>

பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். இயந்திரத்தனமான நகர வாழ்க்கையிலும் மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.