தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் மனோபாலா. இவருக்கு தற்போது 69 வயது ஆகின்றது. இவர் தாய் மாமன், நட்புக்காக மற்றும் தாஜ்மஹால் உள்ளிட்ட 175க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைப் போலவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படம், தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் இவரின் நகைச்சுவை மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் உடல் நலக்குறைவாழ் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்றை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் சேரன், தாங்க முடியாத செய்தி, மனதை உலுக்கி எடுக்கிறது, நான் பெற்ற உங்களின் அன்பு மறக்க முடியாதது, போய் வாருங்கள் மாமா என்று இரங்கல் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து miss u sirஎனது இதயம் நொறுங்கி விட்டது என்று இயக்குனர் மாறி செல்வராஜ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் மனோபாலா மறைவுக்கு பின் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.