விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்து வரும் சுஜித்ரா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒட்டுமொத்த பெண் ரசிகைகளை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பாக்யா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஒரு சாதாரண குடும்பத்தில் குடும்பத் தலைவிகள் படும் கஷ்டங்கள் அதனை சமாளித்து அவர்கள் முன்னேறும் விதம் இவற்றை கதையாக அமைத்துள்ளனர். கணவர் தன்னை விவாகரத்து செய்தாலும் சோர்ந்து போகாத பாக்யா தனி ஆளாக நின்று தன்னுடைய குடும்பத்தை கவனித்து வருவது மட்டுமல்லாமல் சுயமாகவும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் சீரியலில் சாதாரண குடும்பப் பெண்களைப் போல மிகவும் சிம்பிளாக இருக்கும் சுஜித்ரா தற்போது மாடர்னாக தனது முடியை அலங்காரம் செய்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Suchitra Ks இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@suchitraks)