தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட மறைந்த நடிகர் மனோபாலாவின் உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது உடலுக்கு, நெருங்கிய உறவினர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தொடர்ந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு, வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.