தளபதி விஜய் தன் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப் போவதாக சென்ற சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. அதேபோன்று பிரபல நடிகையை விஜய் 2ம் திருமணம் செய்யப் போகிறார் எனவும் சர்ச்சை எழுந்தது. எனினும் இதுகுறித்து விஜய் எந்த ஒரு இடத்திலும் பேசவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவர்கள் சந்திப்பின்போது, மேடையில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார் விஜய்.

அதாவது “இந்த சமூகவலைத்தளத்தில் வரும் 75% செய்திகள் பொய்யானதாக உள்ளது. நான் அனைவரையும் கூறவில்லை. ஒரு சிலபேர் கவர்ச்சியான தகவலை வெளியிடுவதாக நினைத்து சிலவற்றை போலியாக வெளியிடுகிறார்கள்” என விஜய் கூறினார். விவாகரத்து, நடிகையுடன் 2-ஆம் திருமணம், தந்தையை மதிக்காமல் இருக்கும் விஜய் என பல வதந்திகளுக்கு இதன் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய் என பேசப்பட்டு வருகிறது.