குக் வித் கோமாளியின் 4-ம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் சிவாங்கி. பைனலிஸ்ட்டில் சிவாங்கி முன்னேறி இருக்கும் சூழலில், அவர் ஜெயிக்கவும் அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. தொடக்கத்தில் சிவாங்கி ஹோம்லியான உடைகளில் மட்டுமே ஷோவில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் சிவாங்கி படிப்படியாக மாடர்ன் உடைகளில் வர தொடங்கி இருக்கிறார்.

இப்போது சிவாங்கி தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று உள்ளார். அங்கு தாய்லாந்து கடற்கரையில் சிவாங்கி கிளாமர் உடையில் எடுத்த புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிவாங்கியா இது?.. என கமெண்ட் செய்து வருகின்றனர்.