உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த போரால் இருதரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ராணுவம், ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலஹாரிஸ் ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற முனிச் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியதாவது “உக்ரைன் உடனான போரில் ரஷ்யா கொடூரமான குற்றங்களை செய்துள்ளது. மேலும் அங்குள்ள பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியது.

பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்துதல், மின்சாரம் பாய்ச்சுவது, கொலை உள்ளிட்ட சித்திரவதைகளை ரஷ்ய ராணுவம் உக்ரைன் பொதுமக்களுக்கு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உக்ரைனில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் தங்கள் குடும்பத்திடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த போர் தொடங்கிய அன்றிலிருந்து ரஷ்ய ராணுவத்தின் அத்துமீறல்கள் எல்லை மீறி சென்றுள்ளது. இது சம்பந்தமாக நமக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கையில், ரஷ்ய இராணுவம் உக்ரைனின் பொது மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றங்களை செய்துள்ளது உண்மைதான் என்பதை நிரூபிக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார்.