பிரேசில் நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவோ பாலோ என்ற மாகாணத்தில் பெய்து வரும் கனமழையினால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து கனமழை மற்றும் நிலச்சரிவினால் சாலை போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால் அந்நாடு முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.