தூங்க செல்வதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் தூங்கிய இளைஞர் பார்வை இழந்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மைக் என்ற இளைஞர் உறங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றாமல் உறங்கியுள்ளார். இதனால் அகண்டா மொய்பா என்ற அரிய வகை சதை உண்ணும் ஒட்டுண்ணியால் அவரது கண் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மைக் தனது பார்வையை இழந்துள்ளார். ஏழு ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸை உபயோகித்த வந்த தனக்கு தொற்று ஏற்பட்டது. இதுவே முதல் முறையாகும் என்றும் லென்ஸ் உபயோகிப்பவர்கள் தன்னைப்போல் தூங்கும்போதும் குளிக்கும்போதும் லென்ஸ் உடன் இருக்க வேண்டாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.