மத்திய கிழக்கு போரில் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் மட்டுமே களத்தில் இருந்த நிலையில், தற்போது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமான் ஆகிய ஐந்து அரபு நாடுகள் ஈரானுக்கு எதிராகத் திரும்பியுள்ளன.
இதற்குக் காரணம், ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் இந்த நாடுகளின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்ததுதான். குறிப்பாக, உலக வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், இந்த நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள அரபு நாடுகள், ஈரானின் ராணுவக் கட்டமைப்பை முழுமையாக அழிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளன.
ஈரானால் தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கருதும் இந்த நாடுகள், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி வருவது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
