Twitter, Tesla, Space X நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் விண்வெளி ஆய்வில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “நிலவில் மனிதர்கள் தரை இறங்கி 66 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது. இது மனித இனத்தின் உயர்ந்த அடையாளமாக இருக்காது. மனித இனத்திற்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் வேண்டும். நிலவில் தளம் வேண்டும். அதோடு மனிதர்கள் நட்சத்திரங்களுக்கு இடையே பயணம் செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.