சாலைகளில் திரியும் மாடுகள் அல்லது கூட்டமாக உட்கார்ந்திருக்கும் மாடுகளின் வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகின்றன. இந்த மாடுகளால் நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் காளைகள் ஆக்ரோஷமாகி, வழிப்போக்கர்களைத் தாக்கி காயப்படுத்துகின்றன. இதனுடன் தொடர்புடைய ஒரு வீடியோ சமூக வலைதளமான X-இல் வைரலாகியுள்ளது.
அதில், ஒரு காளை டிராக்டரை முட்டி தாக்குவது போல் தோன்றுகிறது. முதலில் டிராக்டர் ஓட்டுநர் காளையைத் தவிர்க்க முயற்சிக்கிறார், ஆனால் காளை பின்வாங்காமல் இருக்கவே, ஓட்டுநர் ஆக்ரோஷமாகி வேகமாக டிராக்டரை முன்னோக்கி செலுத்துகிறார்.
सांड के सामने नगर पंचायत की 🚜 ट्रैक्टर खड़ी है.
आवारा सांड गुस्से में लाल हो गया और ट्रैक्टर से भिड़ गया.
फिर क्या था ट्रैक्टर वाला गुस्से में गियर लगाया और धकेलते हुए ले गया.
आज कल पूरे देश में आवारा पशुओं का बोलबाला है सरकार इसपर मौन है. pic.twitter.com/7rvW4OBQ8n
— AYODHYA WALE ❣️ (@WaleAyodhy70737) August 31, 2025
இந்த 26 வினாடிகள் கொண்ட வீடியோவில், பரபரப்பான சாலையில் ஒரு காளை பாறைபோல் நின்று டிராக்டரை முட்டுகிறது. ஓட்டுநர் முதலில் டிராக்டரை பின்னோக்கி இழுக்கிறார், ஆனால் காளை பின்வாங்க மறுக்கவே, அவர் கோபத்தில் வேகமாக முன்னோக்கி செல்கிறார். காளை தன் பலத்தை நம்பி பின்வாங்காமல் நிற்கிறது. சுற்றி நின்றவர்கள் இதைப் பார்த்து வீடியோ எடுக்கின்றனர்.
இந்தப் பதிவு 3 லட்சத்துக்கும் மேல் பார்வைகளையும், நூற்றுக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது. ஒருவர் “காளைக்கு தான் பாகுபலி என்று நினைப்பு” என்று கமெண்ட் செய்துள்ளார்.
