மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் தேவைகளையும் உடனடியாக பூர்த்தி செய்து வருகிறது. அண்மையில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விதிகளை புதுப்பித்து அரசு வெளியிட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு 42 நாட்கள் கூடுதலாக விடுமுறை அளிக்க அரசு முடிவுசெய்துள்ளது.

வழக்கமாக ஒரு வருடத்திற்கு 30 நாட்கள் விடுமுறை தினமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. எனினும் உடல் உறுப்பு தானம் போன்ற உதவும் நோக்கத்தோடு செயல்படும் நபர்களுக்கு கூடுதல் விடுப்பு வழங்க அரசு முடிவுசெய்துள்ளது. அதோடு இந்த சிறப்பு விடுமுறை அறிவிப்பு மத்திய அரசின் ரயில்வே மற்றும் அகில இந்திய சேவை ஊழியர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.