டெபிட் கார்டுகள் வாயிலாக நாம் ATM-ல் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இது மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாக பணம் எடுக்க மற்றும் வாங்க அனுமதிக்கிறது. இந்த அட்டைகள் பணத்தை எடுத்து செல்வதற்கு வசதியான மாற்றீட்டை வழங்குகிறது மற்றும் தனி நபரின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

PIN அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மோசடி தடுப்பு வாயிலாக அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு எதிராக டெபிட் கார்டுகள் பாதுகாப்பை வழங்குகிறது. சில சமயங்களில் டெபிட் கார்டு தவறாக (அ) திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒருவர் வங்கியில் புகார் செய்யவேண்டும்.

இதன் மூலம் அவர்கள் அட்டையை முடக்க முடியும். வங்கியின் உதவி எண் வாயிலாக தொடர்புக்கொண்டு இதனை செய்யலாம். உங்களின் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கார்டு தொலைந்து போயிருந்தால் (அ) திருடப்பட்டு இருந்தால், அதனை செயலிழக்க நெட் பேங்கிங் (அ) SMS சேவையை பயன்படுத்தலாம்.

உங்களது எஸ்பிஐ ATM/டெபிட் கார்டை தடுப்பதற்கான விரைவான வழிகளில் ஒன்று, வங்கியின் கட்டணம் இல்லா 1800 11 2211 (அ) 1800 425 3800 என்ற எண்ணுக்கு அழைப்பது. கட்டணம் இல்லா எண்ணை டயல் செய்தபின் கிடைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்களது கார்டைத் தடுக்கவும்.