மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய அரசு அடுத்த மாதம் அகவிலைப்படியை உயர்த்தவுள்ள நிலையில், அதனுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் அதிகரிக்கப்போகிறது. இப்போது ​​அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 42% வழங்கப்படுகிறது. இதற்கிடையில் விரைவில் வீட்டுவாடகை கொடுப்பனவையும் அரசு உயர்த்த போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

இதற்குரிய திட்டமிடல் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவை அதிகரிக்க இயலும். அந்த வகையில் 2023-2024 நிதி ஆண்டின் இறுதிக்குள், அரசு வீட்டுவாடகை கொடுப்பனவை அதிகரிக்கலாம். அத்தகைய நிலையில் அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டினால், அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை திருத்தம் செய்யும் என்பதுகவனிக்கத்தக்கது.