இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் அடிக்கடி ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பும் வெளியாகி வருகிறது. அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த பிரதமர் மோடி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணவீக்கம் மற்றும் விலைவாசி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆண்டு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாது ஓய்வூதியம் பெறும் ஊழியர்களுக்கும் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்படுவதாக கூறப்படுகின்றது.