மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சி பிரிவு மற்றும் கேசட் ரேங்க் இல்லாத B பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. துணை ராணுவ படைகளில் பணியாற்றுவோருக்கும் தீபாவளி போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 7000 ரூபாய் வரை புவனேஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.