மத்திய பிரதேசம் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் கமல் நாத் 106 பக்கங்களைக் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். இதில் மொத்தமாக 59 வாக்குறுதிகள் உள்ள நிலையில் மக்களை கவரும் பல வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

அதன்படி பொதுமக்கள் அனைவருக்கும் 10 லட்சம் விபத்து காப்பீடு உட்பட 25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுவதாகவும் மாநிலத்திற்கு சொந்தமாக ipl அணி மற்றும் விவசாயிகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன், பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் மற்றும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு இலவச பள்ளி கல்வி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளனர்