செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  திமுகவை பொறுத்த வரையில், உதட்டுளவுல ஒன்னு,  உள்ளத்து அளவுல ஒன்னு. அதாவது ரெட்டை வேடதாரிகள். அதை அவங்க புரிஞ்சி வச்சிருக்காங்க. புரட்சித்தலைவர், அம்மா,  அண்ணன் எட்டப்படியார் காலத்தில் தான் இஸ்லாமிய மக்களுக்கு எல்லா வித அளவுக்கு பாதுகாப்பும் இருந்துச்சு.

ADMK ஆட்சி காலத்தில்  இஸ்லாமிய மக்கள், கிறிஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தோம். 1992-இல் பாபர் மசூதி பிரச்சனை வந்துச்சு அப்போது தமிழ்நாட்டில் எதாவது பிரச்சனை வந்துச்சா..  கலவரத்தை அடக்குறதுக்கு நம்ம போலீஸ்ஸை கர்நாடகத்துக்கு அனுப்புனோம். நம்ம போலீஸ்ஸை ஆந்திராவுக்கு அனுப்பினோம். ஆனால் இங்க அமைதியாக இருந்தது.

1996இல் திமுக ஆட்சி வந்தது. குண்டு வெடிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆட்சியை  கலைச்சிருவாங்க என எல்லா இஸ்லாமிய பெரியவர்களை கைது செஞ்சி,  தீவிரவாதி போர்வை போதி, அவர்கள் மீது அடக்குமுறை ஏவி விட்டது. மசூதிக்குள்ள மரபு மீறி சட்ட விரோதமா நுழைந்தது. கைது பண்ணது.  6 மணிக்கு மேல இஸ்லாமிய வீடுகள் உள்ளே போகக்கூடாது. 

தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீட்டிற்குள் நுழைந்தது. பல்வேறு வகையான அளவுக்கு அடக்கு முறை. திமுக ஆட்சியில் இஸ்லாமிய மக்கள் டிசம்பர் 6ன்னு வந்துட்டாலே ஆட்டோல போனா கூட யாருன்னு செக் பண்ணுற அளவுக்கு தான் இன்னைக்கு காவல்துறை இருந்தது. 

ஆனால் 2001, 2006இல் அப்படி கிடையாது. 2011 – 2016இல் கிடையாது. 2016-2021இல் கிடையாது. இஸ்லாமிய  மக்கள், கிறிஸ்தவ மக்களை  பொறுத்தவரை பாதுகாப்புன்னு சொன்னா…  அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என உணர்ந்து இருக்காங்க. ஒட்டுமொத்தம சிறுபான்மை மக்களுடைய பாதுகாவலனாக இருக்கக்கூடிய அரசுனா நம்முடைய அரசு,  அம்மாவுடைய அரசு தான் என தெரிவித்தார்.