தமிழகத்தில் மின்சாரத்துறை மூலமாக வீடுகளிலும் சிறு தொழிற்சாலைகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுப்பதற்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மீட்டர்களில் மின் பயன்பாடு எவ்வளவு என்பது காட்டப்படும் நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்கள் நேரில் சென்று மின் கணக்கீடு செய்து வருகிறார்கள். அதன் பிறகு அலுவலகம் வந்து அந்த விபரத்தை கணினியில் பதிவேற்றம் செய்யும் நிலையில் சில ஊழியர்கள் நேரில் வராமல் இஷ்டத்திற்கு கணக்கீடு செய்கின்றனர். இதனால் முறைகேடு நடைபெறுவதாக புகார் இருந்த நிலையில் அதனை தடுப்பதற்காகவும் மின்கட்டணத்தை நுகர்வோருக்கு தெரிவிக்கவும் மொபைல் செய்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலை ஊழியர்களின் மொபைல் போனில் பதிவேற்றம் செய்து தரப்பட்டுள்ள நிலையில் ஆப்டிகல் கேபிளும் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டு விவரம் செயலியில் பதிவேற்றப்பட்டு உடனே விவரங்கள் அனைத்தும் கணக்கிடப்படும். இந்த திட்டம் வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க விரிவு படுத்தப்பட உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 44 மின் பகிர்மான வட்டங்களிலும் தலா 10 பிரிவு அலுவலகங்களில் வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவற்றில் அக்டோபர் 18 அதாவது இன்று முதல் கணக்கெடுக்க மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரிய முத்தரவிட்டுள்ளது.