செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை, இன்னைக்கு நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்துடைய ஆட்சியை பாத்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக தமிழகத்தினுடைய உரிமைகளை எல்லா இடத்துலயும் விட்டு கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. இன்னைக்கு சென்னையை பொறுத்த வரை போராட்ட களமாக சென்னை மாறி இருக்கு.

ஒரு பக்கம் செவிலியர்கள் போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க.   இன்னொரு பக்கம் டெட் பரிட்சை பாஸ் பண்ணுன ஆசிரியர்கள் போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க. இது எல்லாமே திமுக உடைய தேர்தல் வாக்குறுதியில் நாங்க செய்யிறோம் என சொன்ன வேலை.  செய்யாம இருக்குற காரணத்தினால் சென்னை பொறுத்தவரை தினமும் போராட்ட களம்.

தினமும் கூட காவல்துறை குண்டு கட்டாக அவுங்களை தூக்கிட்டு போறாங்க. இது எல்லாம் தமிழ் நாட்டுல பாத்ததே கிடையாது. அதனால் தமிழகத்துல அரசியல் சூழலை பத்தி பாரதிய ஜனதா கட்சி பேசுதுனா…   இது எல்லாம் தான் பேசுனோம். எப்படி மக்களினுடைய நலனை காப்பது ? குறிப்பாக சட்டப்பேரவையில்  ஒரு தீர்மானம் கொண்டு வந்தாங்க.

ஒருதலை பட்சமான தீர்மானம்.  மத்திய அரசுக்கு, இதுக்கு எந்த சம்மந்தமே கிடையாது. இவர்களும் கர்நாடகவில் இருக்கிற காங்கிரஸ் சேர்ந்து கபடி மேட்ச் விளையாடுவது போல விளையாண்டுக்கிட்டு இருக்காங்க. அங்க ஒன்னு பேசுறாங்க, இங்க ஒன்னு பேசுறாங்க. இதை எல்லாம் கண்டிக்க வேண்டும். இதை எல்லாம் மக்கள் கிட்ட எடுத்து சொல்லணும். இதை எல்லாம் மக்கள் பாத்து கொண்டிருக்கார்கள் என தெரிவித்தார்.