
கரும்பு கொள்முதல் விலை ரூபாய் 315 இல் இருந்து ரூபாய் 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால் கரும்பு விவசாயிகள் 5 கோடி பேர் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், பாஜக தமிழ்நாடு சார்பில் நன்றி, எங்கள் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திரமோடி அரசு கரும்புக்கான எப்ஆர்பியை குவிண்டாலுக்கு ₹315ல் இருந்து ₹340 ஆக உயர்த்த ஒப்புதல் அளித்தது. இந்த அதிகரிப்பு தமிழ்நாட்டின் கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு பயனளிக்கும் மற்றும் திரு முக ஸ்டாலின் கரும்புக்கான எப்ஆர்பியை குவிண்டாலுக்கு ₹400 ஆக உயர்த்துவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார்.
இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ. 315 லிருந்து, ரூ.340 ஆக உயர்த்தி அறிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு, தமிழக கரும்பு விவசாயிகள் சார்பிலும், பாஜக தமிழ்நாடு சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்துவோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக, திமுக, விவசாயிகளுக்குக் கொடுத்த தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.
On behalf of @BJP4TamilNadu, we thank our Hon PM Thiru @narendramodi avl for approving the increase of FRP of Sugarcane from ₹315 to ₹340 per quintal. This increase will benefit our hard-working farmers in Tamil Nadu & we would like to take this opportunity to remind Thiru…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) February 22, 2024