மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாளை மறுநாள் சந்திக்கிறது தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு.

ஜனவரி 13ஆம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாடு அனைத்து கட்சி எம்பிக்கள் குழு சந்திக்கிறது. ஜனவரி 13-ஆம் தேதி பிற்பகல் 3:30 மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து  அனைத்துக் கட்சி எம்பிக்கள் பேசவுள்ளனர். சென்னை, தென் மாவட்ட வெள்ளை பாதிப்புகளுக்கான நிவாரண நிதி ஒதுக்கீடு தொடர்பாக எம்பிக்கள் குழு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறது.

தமிழ்நாடு அரசு கோரி உள்ள வெள்ள நிவாரண தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு எம்பிக்கள் குழு வலியுறுத்த உள்ளது. தமிழக வெள்ள பாதிப்புக்கு நிதி வழங்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.