மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கிறது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில், மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 12,176 காளைகள் பங்கேற்கும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ஆன்லைன் மூலம் 4,514 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அலங்காநல்லூர் -6,099, பாலமேடு -3,677, அவனியாபுரம் – 2,400 காளைகள் பங்கேற்க உள்ளன.

அதேபோல அலங்காநல்லூர் – 1318, பாலமேடு -1412, அவனியாபுரம் -1,784 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் தொடர்ந்து 5 நாட்கள் போட்டி நடைபெறும். சிறந்த காளைகளுக்கு முதல்வர் சார்பாக கார் வழங்கப்படும். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி சார்பாக கார் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.