ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தவர் ரந்தீர் சிங். ராஜஸ்தான் மாநிலம் ஷிகார் பகுதியை சேர்ந்த இவர் விமானத்தில் பயணித்த போது மது போதையில் விமான பணிப் பெண்ணின் கையை பிடித்து தகராறு செய்துள்ளார்.

அதோடு சக பயணிகளிடமும் கடுமையாக நடந்துள்ளார். இதனை தொடர்ந்து விமானம் தரையிறங்கியதும் அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.