இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகள் திருமணம் மற்றும் உயர் படிப்பு என எதிர்கால செலவுக்காக இப்போது இருந்தே சேமிக்க விரும்புகின்றனர். இவ்வாறு குழந்தையின் பெயரில் சேமிக்க வேண்டும் என்றால் அதற்காக வங்கிகளில் சில விதிமுறைகள் உள்ளது. அதாவது பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்க பெற்றோர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்களோ அதே வங்கியில் தான் குழந்தைக்கு வங்கி கணக்கு தொடங்க வேண்டும்.

அதே சமயம் வங்கியின் கேஒய்சி செயல்முறையை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும். மைனர் குழந்தைகளாக இருக்கும் வரை சேமிப்பு கணக்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் கண்காணிப்பில் இருக்கும். பத்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை சேமிப்பு கணக்குகளை நிர்வகிக்க வங்கிகள் அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.