இந்தியாவில் பேருந்துகளை விட ரயிலில் மிக குறைந்த கட்டணம் என்பதால் மக்கள் பலரும் அதிக அளவு ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்யும்போது பயன டிக்கெட் உறுதி செய்யப்படாமல் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்படுகின்றது. அதன் காரணமாக பயணிகள் பலரும் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுவதால் இனி வெயிட்டிங் வைக்காமல் பயணிகள் நேரடியாகபயண டிக்கட்டை உறுதி செய்யும் முயற்சியாக ரயில்வே துறையை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றது போல அடுத்த ஆண்டுகளில் 3000 புதிய ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ரயில்வே 200 முதல் 250 புதிய ரயில்களை இணைக்க வாய்ப்பு உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்