இந்தியாவில் லேப்டாப், டேப்லெட், ஆல் இன் ஒன் பிசிகள், சர்வர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பாக்டர் கருவிகள் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் உள்நாட்டில் அடுத்த ஆறு வருடத்திற்குள் 17,000 கோடி மதிப்பிலான ஐடி ஹார்ட்வேர் உற்பத்தியை பெருக்குவதற்கு பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல், பாக்ஸ்கான், எச்.பி., ரைஸ்சிங் ஸ்டார்ஸ், இந்தியா சேல்ஸ் உள்ளிட்ட 27 நிறுவனங்கள் பல லட்சம் கோடி மதிப்பிலான மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட் என பிற உபகரணங்களை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதன் உற்பத்தி அதிகரித்தால் சுமார் 2 லட்சம் ஊழியர்களுக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.