புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பிரியதர்ஷினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரி கல்வித்துறை நடப்பு கல்வி ஆண்டில் வகுப்புகளை நடத்த மண்டல நேரடி ஆட் சேர்ப்பு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும் . தற்போது அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சேவை தேவைப்படுவதால் இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் 2023 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியின்படி 65 வயதை கடந்திருக்கக் கூடாது.

இதனால் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு 22 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் எனவும் விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியமற்ற படுவார்கள் எனவும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மண்டல வாரியாக கலந்தாய்வு தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அசல் சான்றிதழ்களுடன் ஓய்வூதிய ஆணை, வயது மற்றும் தகுதி சான்றிதழ்களின் நகல்களை கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது