இந்தியாவில் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மாநில அரசின் பங்களிப்புடன் 6000 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகளிடமிருந்து விளைப்பொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் விவசாயிகளுக்கு போனஸ் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்..