கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து அங்கு சென்று மக்களின் நிலையை அறிந்து வருகின்றனர். ஆனால் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) சார்பில் எந்த முக்கிய தலைவர்களும் கரூரில் காணப்படவில்லை என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

இதையே சுட்டிக்காட்டி, ஒரு அரசியல் விமர்சகர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாம் கட்ட தலைமை என்ற கட்டமைப்பே இல்லை என்பதே இந்த துயரச் சம்பவத்தின் முக்கிய காரணங்களில் ஒன்று. ஒரு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் மக்களுடன் நேரடி தொடர்பு வைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பவர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Second Show (@secondshowtamil)

“>

ஆனால் TVK-யில் ஒற்றை தலைமை மட்டுமே உள்ளது. இதுவே சீரற்ற நிலையை உருவாக்கியுள்ளது” எனக் கூறியுள்ளார். மேலும், “மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு என்று டயலாக் எல்லாம் பேசி வந்தீர்கள்; ஆனால் செயல்முறையில் அது எங்கே?” என்று கேள்வி எழுப்பிய அவர், “இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்திருந்தால் இவ்வாறான துயரங்கள் நிகழ்ந்திருக்காது” என விமர்சித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.