தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் மாற்றிய நிலையில் அதன் மூலம் பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார். சமீப காலமாகவே நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற தகவல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமான பல சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகர் விஜயின் பிறந்தநாள் ஜூன் 22-ஆம் தேதி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மதுரையில் தளபதி ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் 2024-ல் பாராளுமன்றமே, 2026-ல் தமிழக சட்டமன்றமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.