தமிழக வெற்றி கழகத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இணையும் பிரம்மாண்ட விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் மரகதம் குமரவேல், தான் அதிமுகவை விட்டு விலகி தவெக-வில் இணைந்தது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் அவதூறுகளுக்கு மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
தான் தவெக-விற்குச் சென்றதற்குப் பின்னால் மிகப்பெரிய குதிரை பேரம் நடந்திருப்பதாக அதிமுகவினர் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக அவர் மேடையிலேயே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தவெக தரப்பில் தனக்கு 50 கோடி ரூபாய் பணம் கொடுத்ததால் தான் தான் அக்கட்சியில் இணைந்ததாக அதிமுகவில் இருக்கும் சிலர் அசிங்கமான வதந்திகளைப் பரப்பி வருவதாக மரகதம் குமரவேல் கொதித்துப் பேசியுள்ளார்.
இந்த அவதூறுகளுக்கு அதிரடியாகச் சவால் விடுத்த அவர், “என் வீட்டுக்கு வேணும்னா இப்போதே ரெய்டு அனுப்பிப் பாருங்க, என் வீட்டில் என்ன ரெய்டு வேண்டுமானாலும் விடுங்கள், மடியில் கனமில்லாததால் எனக்கு எந்தப் பயமும் இல்லை” என்று சிங்கப் பெண்ணாக மேடையில் கர்ஜித்துள்ளார்.
