புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வேலாடிப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையால் (டாஸ்மாக்) அப்பகுதி மக்களுக்கு நீண்டகாலமாக இடையூறு ஏற்பட்டு வந்துள்ளது.
குடியிருப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று திரண்ட ஏராளமான கிராமப்புறப் பெண்கள், அந்த மதுபானக் கடையை முற்றுகையிட்டு அதிரடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையை நிரந்தரமாக மூடும் வரை தங்களின் போராட்டம் ஓயாது என ஆவேசத்துடன் முழக்கமிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
