ஆஸ்திரேலியாவின் ஸ்கை நியூஸ் (Sky News) செய்தித் தொகுப்பாளர் ரீட்டா பனாஹி (Rita Panahi), ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மரணம் குறித்துப் பேசிய கருத்துக்கள் இப்போது இணையத்தில் உலகளாவிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ரீட்டா, தனது நேரடி ஒளிபரப்பில் காமேனியை “மதிப்பற்ற நாய்” என்றும், “நரகத்தில் எரிந்து சாம்பலாகு” என்றும் பாரசீக மொழியில் மிகக் காட்டமாகச் சாடினார். 47 ஆண்டுகால இஸ்லாமிய சர்வாதிகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், ஈரான் விரைவில் விடுதலையடையும் என்றும் அவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.
🇦🇺 Sky News Australia anchor, Rita Panahi, addressed Iran's late leader, Ali Khamenei, in Persian:
"You son of a b*tch, shame on you, burn in hell!" pic.twitter.com/sNTiGNyhAZ
— Visegrád 24 (@visegrad24) March 1, 2026
மெல்போர்ன் நகரில் காமேனியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துப் போராட்டம் நடத்தியவர்களை “முட்டாள்கள்” என்று அழைத்த அவர், “உங்களுக்கு இஸ்லாமிய சட்டங்கள் பிடிக்கும் என்றால் அத்தகைய நாடுகளுக்கே சென்று விடுங்கள்” எனப் பதிவிட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரீட்டாவின் இந்த அதிரடிப் பேச்சுக்கு ஒருபுறம் “தைரியமான பெண்” எனப் பாராட்டுகள் குவிந்தாலும், மறுபுறம் “இஸ்ரேலின் ஊதுகுழல்” என்றும், போரில் பலியான அப்பாவிப் பெண்களின் உயிர்களை ரீட்டா மதிக்கவில்லை என்றும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
