சவூதி அரேபியாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட பாகிஸ்தான்’ முத்திரை கொண்ட மின்விசிறிகள் குஷிநகரில் உள்ள ஒரு மதரசாவில் கண்டறியப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மதரசாவிற்கு சவூதி அரேபியாவிலிருந்து சில பொருட்கள் உதவியாக வந்துள்ளன.
மேலும் அதில் இருந்த மின்விசிறிகளில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததை கவனித்த உள்ளூர் மக்கள் மற்றும் சில அமைப்புகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடைகளில் பாகிஸ்தான் தயாரிப்புகள் இருப்பது பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இத்தகைய பொருட்கள் மதரசாவிற்கு வந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, இதில் ஏதேனும் விதிமீறல்கள் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
