மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தெயி சமூகத்தை சேர்ந்தவர்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.
இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி ஆங்காங்கே வன்முறைகள் தொடங்கிய நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ராஜ்ய சபா எம்பியுமான ஹர்பஜன்சிங் “இந்திய மகள்களை கொடுமைப்படுத்த யாரையும் அனுமதிக்க கூடாது. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த சம்பவம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். நம் நாட்டில் நடந்த இத்தகைய கொடூர சம்பவத்தை நாம் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது” என கூறியுள்ளார்.