நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட வளங்கள் அலுவலர் தையல்நாயகி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத் தாசில்தார் அமுத விஜயரங்கன், வட்ட வழங்கல் அலுவலர் நீலாயத், ஆட்சி மண்டல துணை தாசில்தார் சந்திரகலா, ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன், ஊராட்சித் தலைவர்கள் வைதேகி ராசு, ஜீவா ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் சசிகலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் பொதுமக்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதியவர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள், புதிய ரேஷன் கார்டு உட்பட 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் இந்த முகாமில் வழங்கப்பட்டது.