“மக்களோட ₹38 கோடி வரிப்பணம் இப்படி வீணாகலாமா?” என்று 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் சிஎம் விஜய் (இரண்டு தொகுதிகளில் வென்றதால் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தது) உள்ளிட்ட 7 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ள விவகாரம் இப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த அடுத்தடுத்த ராஜினாமக்கள் காரணமாக, தமிழக அரசுக்கு கூடுதலாக சுமார் ₹38.5 கோடி வரை தேவையற்ற தேர்தல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ஏனென்றால், நடந்து முடிந்த 2026 பொதுத்தேர்தலுக்காக மட்டும் தமிழக அரசு ஒட்டுமொத்தமாக ₹1,302 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கி, ஒரு தொகுதிக்கு சராசரியாக ₹5.5 கோடி வரை செலவு செய்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தற்போது காலியாகியுள்ள இந்த 7 தொகுதிகளுக்கும் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், அரசுக்கு கூடுதலாக ₹38 கோடிக்கு மேல் வீண் செலவாகும் என்று சமூக வலைத்தளங்களில் கணக்குப்பிள்ளையாய் நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸில் விவாதித்து, இந்தத் தகவலைத் தீயாய் ஷேர் செய்து வருகின்றனர்.
