கர்நாடக மாநிலம் கலபுரகியில் இருந்து சிஞ்சோளி செல்லும் அரசுப் பேருந்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தின் முகப்பு விளக்குகள் கடந்த 15 நாட்களாகப் பழுதடைந்துள்ள நிலையில், அதைச் சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வேறு வழியின்றி, பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், நடத்துனர் கையில் வைத்திருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தை முன்னால் காட்ட, அதை வைத்து சுமார் 90 கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டியுள்ளார். பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து நடத்தப்பட்ட இந்த அலட்சியமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் போக்குவரத்துத் துறையின் பொறுப்பற்ற தன்மையைச் சுட்டிக்காட்டும் இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. நடுவழியில் விபத்து ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“>

 

பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு பழுதடைந்த வாகனங்களைச் சரிசெய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களைத் தவிர்க்க முறையான பராமரிப்புப் பணிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.