“கூட்டணி இல்லைன்னு சொன்னது நான் இல்ல, அண்ணன் ஸ்டாலின் தான்!” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் மேடையில் பேசிய அதிரடி பேச்சு, தற்போது தமிழக அரசியலில் காட்டுத்தீயாய் பரவி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறிவிட்டதா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த பத்திரிகையாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் மிக நேரடியான பதிலை முன்வைத்துள்ள அவர், உறவை முறித்துக் கொண்ட அறிவிப்பைத் தான் வெளியிடவில்லை என்றும், விசிக தொண்டர்களை இணைத்துக் கொண்டே திமுக தலைமை தான் இந்த முடிவை அறிவித்தது என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தவெக-விற்கு (தமிழக வெற்றிக் கழகம்) ஆதரவு தெரிவிக்கும் கடைசி நொடி வரை திமுக தலைமைக்குத் தாம் தகவல் கொடுத்ததாகவும், அரசியல் தோழமையைச் சிதைக்கக் கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருந்ததாகவும் கூறி தன் மீதான துரோகக் குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடியாக்கியுள்ளார்.

​”நாங்கள் தோற்றாலும் சரி, பல இழப்புகளைச் சந்தித்தாலும் சரி, மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி உடைவதற்கு நான் ஒருபோதும் காரணமாக இருக்க மாட்டேன் என்று தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு வரை தவெக-வின் முன்னணித் தலைவரிடமே அறுதியிட்டுக் கூறினேன்; ஆனால் உறவை இல்லை என்று அறிவித்தது திமுகதான்” எனப் பேசி திருமாவளவன் மேடையில் மொத்த உண்மைகளையும் போட்டு உடைத்துள்ளார்.

கூட்டணி முறிவுக்கான பழியைத் தன் மீது போட நினைத்தவர்களுக்குத் திருமாவளவன் கொடுத்துள்ள இந்த நெத்தியடி பதில், திமுக மற்றும் தவெக ஆகிய இருதரப்பு தொண்டர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை எகிற வைத்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸை போர்க்களமாக்கி, இந்த ஹாட் நியூஸைத் தீயாய் ஷேர் செய்து வருகின்றனர்.