அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த காவலர் ஒருவர், சாலையோரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்துக் கொண்டிருந்தார். அவ்வழியே தனது வாகனத்தில் சென்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், விபத்தைக் கண்டவுடன் காரை நிறுத்திவிட்டு உடனடியாக அந்த காவலரைச் சென்று பார்த்தார்.

மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அவர், காயமடைந்த காவலருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சைகளை அங்கேயே அளித்து அவரை ஆசுவாசப்படுத்தினார். தொடர்ந்து, நேரத்தை வீணாக்காமல் அந்த காவலரை தனது சொந்த காரிலேயே ஏற்றிக்கொண்டு, தீவிர சிகிச்சைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

“>

உரிய நேரத்தில் அமைச்சர் காட்டிய இந்த மனிதாபிமானச் செயல் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.