மக்கள் அதிக அளவில் தங்களுடைய முதலீட்டை மட்டும் தான் பாதுகாப்பாக நம்பி இருக்கிறார்கள். சிலர் அதிக வட்டியை எதிர்பார்க்கிறார்கள். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை மட்டுமே நிர்ணயம் செய்கிறது. வங்கியில் தங்களுடைய திட்டங்களுக்கான கால அளவு முதல் சில வரைமுறைகளும் வகுத்துள்ளது. இவற்றின் மக்களுக்கு எவை வசதியாக உள்ளது என்பதை பொறுத்து அவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

உத்கர்ஷ் சிறு நிதி வங்கி:   5 ஆண்டு FDகளில் 7.75 சதவீத வட்டியை வழங்குகிறது.

நார்த் ஈஸ்ட் சிறு நிதி வங்கி:  5 ஆண்டு FDகளில்  தனது வாடிக்கையாளர்களுக்கு  8 சதவீத வட்டியை வழங்குகிறது.

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டியான 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி. தனது வாடிக்கையாளர்களுக்கு 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8.2 சதவீத வட்டி.

சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி: 5 ஆண்டு நிலையான வைப்புத்தொகைகளுக்கு 8.6% என்ற அதிகபட்ச வட்டி.