நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி புதிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில் நவம்பர் மாதம் 1-ம் தேதியை முன்னிட்டு பல புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. அதன்படி சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும் நிலையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 61.50 காசுகள் உயர்ந்து 1964.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு எஸ் பி ஐ கடன் அட்டைங்களுக்கான பைனான்ஸ் கட்டணங்கள் 3.75 சதவீதமாக உயர இருக்கிறது.
அதோடு மின்சாரம், தண்ணீர், எல்பிஜி உள்ளிட்ட சில தேவைகளுக்கு கூடுதலாக 50000-க்கு மேல் செலுத்தினால் ஒரு சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதேபோன்று தொலைத்தொடர்பு துறையிலும் மாற்றங்கள் வரவுள்ளது. அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட அனைத்து தொலைதொடர்பு ஆபரேட்டர்களும் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் தன்மையை கண்டறியுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் ஸ்பேம் செய்திகள் பயனர்களை சென்றடையாதவாறு கண்டறிந்து தடுக்க முடியும்.
இன்றைய காலகட்டத்தில் வங்கி தேவைகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இந்த முறை 13 நாட்கள் விடுமுறை வருவதால் ஆன்லைன் மூலமாக வங்கி பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அதாவது உள்ளூர் பண பரிவர்த்தினிக்காக இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட புதிய விதிகள் இன்று முதல் அமலாகிறது. இன்று முதல் செபி பங்குச்சந்தையில் பரஸ்பர நிதி சந்தையில் வெளிப்படைத் தனிமை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்க கடுமையான விதிகளை அமல்படுத்த உள்ளது.
அதாவது அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் நிதியில் அவற்றை நிர்வாகிக்கும் அதிகாரிகளின் வாரிசுகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் 15 லட்சத்திற்கும் அதிகமாக பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் முறையாக தெரியப்படுத்த வேண்டும். இதைத்தொடர்ந்து ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு திருத்த விதிகள் நவம்பர் 15 முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் ரயிலின் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைக்கப்பட்ட நிலையில் அதுவும் அமலுக்கு வர உள்ளது.
