நாட்டில் பொது துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் செயல்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் அரசு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அன்றைய தினங்களில் வங்கிகள் செயல்படாது என்பதால் அதற்கு தகுந்தார் போன்ற முன்கூட்டியே மக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை வருகிறது.

அதன்படி 4 ஞாயிற்றுக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை. இதேப் போன்று இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசம் வருகிறது. மேலும் இதன் காரணமாக மொத்தம் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என்பது வந்துள்ளது. இந்த விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்க வேண்டும்.