தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்கிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற மே 5-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் மே 6-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
