இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறிவரும் அழைப்புகளை தவிர்க்குமாறு எச்சரித்துள்ள DOT, இத்தகைய அழைப்புகளால் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளை செய்ய, தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.