அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆன்மீகம் என்ற பெயரில் ஆன்லைன் மூலம் போலிப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அயோத்தியின் பெயரில் போலி பிரசாதம் விற்பனை செய்ததாக அமேசான் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அளித்த புகாரைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அயோத்தி ராம் மந்திர் பிரசாத் என்ற பெயரில் அமேசானில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே மக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.